பட்டியல் இன பஞ்சாயத்து தலைவரை நாற்காலியில் அமரவிடாமல் தடுக்கும் திமுகவினர் - இதான் சமூக நீதியா? ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சமூக நீதி என்று பேசிக்கொண்டே சமூக அநீதியை இழைத்திடும் திரு.ஸ்டாலினின் திமுக ஆட்சியின் அலங்கோலங்கள் நாள்தோறும் தொடர்கதையாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆனாங்கூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. சங்கீதா, பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 

இவரை நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும், சாதியரீதியாகத் திட்டி அவமரியாதை செய்வதாக பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் மீது குற்றம் சுமத்தி, 

இன்று 2.10.24 காந்தி ஜெயந்தி நாளில் நடைபெற்ற கிராமச் சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா செய்து தனது எதிர்ப்பை காட்டியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பட்டியலின மக்களை கிள்ளுக்கீரையாக நடத்தும் அவலநிலை முக ஸ்டாலின் திமுக ஆட்சியில் தொடர்கதையாகி வருவதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று, எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to DMK MK Stalin Govt


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->