காந்தி ஜெயந்திக்கு நோ விடுமுறை - 82 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


காந்தி ஜெயந்திக்கு விடுமுறை வழங்காத 82 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு அறிவிப்பை மீறி தேசிய விடுமுறை நாளான இன்று, பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்காமல் இருந்துள்ளன. 

இது குறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் புகாரின் பேரில் 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on 82 companies for no holiday at gandhi jayanthi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->