2 குண்டு பல்புக்கு ரூ.1,01,580 மின்கட்டணம் - குறுஞ்செய்தியால் ஆடிப்போன விவசாயி.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே மேல்மலைக் கிராமம் பழம்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவருக்கு 9,200 யூனிட்டு மின்சாரத்தை பயன்படுத்தி இருப்பதாகவும், இதனால் ரூ.1,01,580 செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் சம்பவம் குறித்து கொடைக்கானல் மின் வாரிய உதவிப் பொறியாளரிடம் முறையிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக சமூகவலை தளங்களிலும் பதிவிடப்பட்டது. 

அந்தப் பதிவின் மூலம் சந்திரசேகா் தனது வீட்டில் இரண்டு குண்டு பல்புகள் மட்டுமே உபயோகப்படுத்தி வருவதாகவும், 100 யூனிட்டுக்கு குறைவான மின்சாரத்தையே பயன்படுத்தி வருவதால் இவர் மின் கட்டணம் செலுத்தவதில்லை என்பதும் தெரிகிறது. 

இது குறித்து உதவிப் பொறியாளா் தெரிவித்துள்ளதாவது:- "விவசாயி சந்திரசேகா் வீட்டில் 92 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை கணினியில் ஊழியா் பதிவு செய்யும் போது 92-க்கு பதிலாக தவறுதலாக இரண்டு பூஜ்ஜியம் கூடுதலாக 9200 என்று பதிவு செய்துவிட்டாா். 

இதனால், அவருக்கு இவ்வளவு தொகை மின் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்தது. இந்த குளறுபடி குறித்து திண்டுக்கல் மாவட்ட மின் வாரிய உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விவசாயி சந்திரசேகா் வீட்டில் 100 யூனிட்டுக்கு குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளதால், அவா் மின் கட்டணம் செலுத்த தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

formar shocked message of rs 101580 electricity bill in kodaikanal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->