திடீர்திருப்பம் | அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தானா? உறுதிமொழி கேட்கும் அதிமுக தலைமை!
ADMK EPS one head issue affidavit
ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே பழனிசாமி தனித்தனியாக பிரிந்தனர். இதில், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவை பெற்று இருப்பது எடப்பாடி பழனிசாமிதான் என்று களநிலவரம் சொல்கிறது.

மேலும், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவோடு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகளின் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் படி, எடப்பாடி பழனிசாமி பக்கம் கட்சியிருப்பது உறுதியாகியுள்ளது.
அதே சமயத்தில் பொதுக்குழு சம்பந்தமான ஒரே ஒரு மேல்முறையீட்டு மனு மட்டும் வருகின்ற 16ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கு விசாரணையும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

பொதுசெயலர் தேர்வுக்கான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இடைக்கால பொதுசெயலாளரை சுய விருப்பத்துடன் தான் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக்கான உறுதிமொழி (affidavit) பெரும் நடவடிக்கையில் அதிமுக தலைமை இறங்கியுள்ளது.
English Summary
ADMK EPS one head issue affidavit