இந்த கனமழை தொடர்ந்திருந்தால்...! எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துவது, "குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலையில் உள்ளது.

சென்னை ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.

இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது. 20 செ.மீ. மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என முதல்வரும், அமைச்சர்களும் தெரிவித்தனர்.

1,840 கி.மீ. அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவடைந்தது. எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை.

வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் பிரச்சினை இருந்திருக்காது. திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் படி எடுத்த நடவடிக்கைகள் என்ன?

அதிமுக பணிகளை திமுக தொடர்ந்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது. திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கனமழை தொடர்ந்திருந்தால் மக்கள் எங்கும் சென்றிருக்க முடியாது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Say About Chennai Rains DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->