திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோ! சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் தர்ம கர்த்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சாமி படத்துக்கு கீழ் இருக்கையை போட்டு வடிவேலு காமெடியை ரீல்ஸாக எடுத்து பதிவிட்டு உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்   மனுதாரர் ஜெயப்பிரகாஷ் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், கோவில் வளாகத்துக்குள் ரீல்ஸ் வீடியோ எடுத்தால் சாமிக்கு என்ன மரியாதை? என்று கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், சாமி மீது பயம் வேண்டாமா? இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Temple Reels Chennai High court Condemn


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->