அன்புமணி இராமதாஸ் போட்ட டிவிட்! நடிகர் சசிகுமார் கொடுத்த ரிப்ளே! - Seithipunal
Seithipunal


பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் நந்தன் படம் பார்த்ததாகவும், சமூகநீதியின் கருப்பு வரலாற்றைத் தான் நந்தன் திரைப்படம் பேசுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் பத்திரிகையாளர் இரா.சரவணன் இயக்கி, நடிகர் சசிகுமார்  நடித்த நந்தன் திரைப்படம் பார்த்தேன். 

உள்ளாட்சிகளின் வாயிலை  நந்தன்களுக்கு சட்டம் திறந்து விட்டாலும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் மூடி விடுகின்றனர் என்ற சமூகநீதியின் கருப்பு வரலாற்றைத் தான் நந்தன் திரைப்படம் பேசுகிறது. உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கான உரிமைகளை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார், "நந்தன் படத்தை நேரம் ஒதுக்கிப் பார்த்து பாராட்டியதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி ஐயா… உங்களின் கருத்து  நந்தன் படத்தை இன்னும் பெரிதாகக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. சமூகநீதியை உரக்கச் சொல்லும் குரல்கள் இன்னும் பெரிதாகட்டும்…" என்று சசிகுமார் அன்புமணி இராமதாசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேபோல் நந்தன் படத்தின் இயக்குனர் அளித்துள்ள பதிலில், உள்ளாட்சி அரசியலில் சமூகநீதியின் அவலத்தைச் சொல்லும் ‘நந்தன்’ படத்திற்கு உங்களின் பாராட்டு மகத்தானது; நம்பிக்கையானது. ‘நந்தன்’ முன்வைத்திருக்கும் பிரச்னையை உங்களின் கருத்து, மிகப்பெரிய விவாதமாக்கி இருக்கிறது. இது விடியலை நோக்கி நகர்ந்தால், அதில் உங்களின் பங்களிப்பு முக்கியமானது. ‘நந்தன்’ படத்தை தேர்ந்தெடுத்து பார்த்ததற்கும், கருத்து தெரிவித்ததற்கும் மனமார்ந்த நன்றி ஐயா" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Nanthan Sasikumar


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->