திராவிடம் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு - சொலிக்கிறார் புரட்சி தமிழர்! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய

"தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்"

என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும். இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.

திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி!
திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி!
திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு!

தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும்  வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்.

"எங்கெங்கு காணினும் சக்தியடா” என்று பாவேந்தர்  பாரதிதாசன் பாடினார். தொட்டதெற்கெல்லாம் அவரை குறிப்பிடும் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் நாட்டில் “எங்கெங்கு காணினும் இந்தி” -யடா
என்று பாடிக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

நாடு முழுவதும் இந்தி மாதம் என்ற ஒன்றை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. 
இந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழா சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இன்று மாலை நடைபெறும் என்றும்,  அதில் தமிழக ஆளுநர் அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மத்திய அரசு முன்னெடுப்பது ஏற்கக்கூடியதல்ல" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Say About Dravidan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->