காங்கிரஸை முந்தும் அதிமுக.. ஈரோடு கிழக்கில் களம் காணும் கே.வி. ராமலிங்கம்...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு ஜனவரி 31ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தாக்கல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது.

ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று காலை அதிமுகவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ளார். இதன் மூலம் கரூர் கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. 

இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக அதிமுகவின் சின்னமான இரட்டை இலை குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் பங்கேற்றுள்ளார். அதேபோன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் கே.வி ராமலிங்கம் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் அதிமுக சார்பில் கடந்த 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர் கே.வி ராமலிங்கத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவிக்கும் முன்பே அதிமுக வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk Ex minister KV Ramalingam likely to contest in Erode East by election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->