ஒரு நாள் இரவு விருந்தில் இவ்வளவு பெரிய தொகையா?டிரம்ப் புதிய சாதனை!
So much money at a one-night party?
ஒரு நாள் இரவு விருந்தில் இவ்வளவு பெரிய தொகையை டிரம்ப் அள்ளியிருப்பது உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் முறைப்படி டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்டார். அமெரிக்க பாரம்பரிய முறைப்படி, துணை ஜனாதிபதியாக வான்ஸ் பொறுப்பேற்று கொண்டார். அப்போது ராணுவ பீரங்கி குண்டுகள் முழங்கின.இந்நிகழ்ச்சியில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர். டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.
விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு டிரம்ப் இரவு விருந்து அளித்து கவுரவித்துள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து விருந்தினர்கள் ,இந்தியாவில் இருந்து தொழிலதிபரான முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீடா அம்பானி சென்றிருந்தனர்.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் பாரம்பரிய நிகழ்ச்சியாக அல்லாமல், உலகளாவிய அரசியல் நிகழ்வாக இதனை டிரம்ப் மாற்றியுள்ளார். அவர் அளித்த இரவு விருந்து செய்தியே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
டிரம்புடனான இரவு விருந்து நிகழ்ச்சி, ஒரு நிதி திரட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.இதற்க்கு 5 வகையான டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஆனால் குறைந்தபட்சம் 50 ஆயிரம் டாலர்கள் முதல் அதிகபட்சம் 1 மில்லியன் டாலர்கள் வரை அவற்றின் விலை இருந்தாலும் அவரவர் விருப்பத்திற்கேற்ப டிக்கெட்டுகளை பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது .
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் டிரம்ப் உடன் இரவு விருந்து சாப்பிடுவதற்கு 6 டிக்கெட்டுகளும் கிடைக்கும். இதற்காக ஏற்கனவே நிறைய பேர் பெரிய தொகையை கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர்.இதன்படி, ரூ.1,700 கோடி வரை பணம் இதில் திரண்டுள்ளது. இந்த தொகையானது ரூ.2 ஆயிரம் கோடியை அடையும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், டிரம்ப் ஒரு புதிய சாதனை படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னவானாலும், ஒரு நாள் இரவு விருந்தில் இவ்வளவு பெரிய தொகையை டிரம்ப் அள்ளியிருப்பது உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
English Summary
So much money at a one-night party?