பள்ளி மாணவிக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து கடிதம்.!
mp priyanga gandhi letter send to school student in kerala
கேரளா மாநிலத்தில் பள்ளி மாணவ-மாணவிகளிடம் அஞ்சலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில், முக்கிய பிரமுகர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பும் திட்டத்தை சில பள்ளிகள் செயல்படுத்தின. அந்த வகையில் செனாடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் தங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து வாழ்த்து அட்டைகள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு வரும் தங்களுக்கு பிடித்த பிரமுகர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பினர். அதில், 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ரேயா சபின் என்பவர் வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் பிரியங்கா காந்திக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு பிறகு ஸ்ரேயா பெயருக்கு அவர் படிக்கும் பள்ளிக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தை பிரியங்கா காந்தி எம்.பி. தனது கைப்பட எழுதி அனுப்பி இருந்தார். அதில் அவர், ஸ்ரேயா, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.
இந்தக் கடிதத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிஜூ, மாணவ-மாணவிகள் மத்தியில் ஸ்ரேயாவிடம் ஒப்படைத்தார். மாணவியின் வாழ்த்து கடிதத்துக்கு மதிப்பு அளித்து பிரியங்கா காந்தி பதில் கடிதம் அனுப்பிய சம்பவம் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பலரை நெகிழ்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
English Summary
mp priyanga gandhi letter send to school student in kerala