கருணாநிதிக்கு பதில் கரையான், முதலை, அணில் பெயர் வைத்து கொள்ளுங்கள் உதயநிதி - போட்டு தாக்கிய நடிகை!
ADMK Gayatri Rahuram condemn to Udhay
திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், உதயநிதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து அதிமுக நிர்வாகி நடிகை காயத்ரி ரகுராம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "விவசாயி பின்னணி, பாமர மக்களின் தலைவராக கொண்ட உண்மையான தமிழர் அய்யா (எடப்பாடி பழனிச்சாமி).
ஒரு நல்ல நபரை இழிவுபடுத்துவதன் மூலமோ அல்லது தாழ்த்துவதன் மூலமோ நீங்கள் தலைவராக முடியாது உதயநிதி ஸ்டாலின்.
இதற்கு உங்களுக்கு செவாலியே சிவாஜி கிடைக்காது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற பட்டபெயரைப் பெறலாம். ஒரு துணை முதல்வருக்கு இது முற்றிலும் முதிர்ச்சியற்ற பேச்சு.
தமிழ் மொழியில் மரியாதை இல்லை என்றால் அழகு இல்லை. ஊழல் பற்றிய கேள்விக்கு மிருகங்கள் அல்லது பூச்சி சாக்கு சொல்வதன் மூலம் தப்பி ஓடிய வரலாறு திமுகவுக்கு உண்டு.
கலைஞரின் பெயருக்குப் பதிலாக நீங்கள் கரையான், எறும்பு, முதலை, அணில் திட்டங்களுக்கு பெயரை வைத்துக்கொள், பொருத்தமாக இருக்கும்.
உங்களை வெற்றி பெறச் செய்ய போலிக் கதைக்காக பிரசாந்த் கிஷோருக்கு 450 கோடி கொடுத்ததை மறந்துவிட்டீர்களா? திமுக வெற்றிக்காக தேர்தல் பத்திரம் மூலம் வசூலித்ததை மறந்துவிட்டீர்களா? உதயநிதி ஸ்டாலின்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
ADMK Gayatri Rahuram condemn to Udhay