சிந்திய அரசிகளால் ரூ.1900 கோடி நஷ்டம்! இந்த செய்தி உண்மையா? பொய்யா?
Ration thing leakage
ரேஷன் கடைகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவு தானியங்கள் நாடு முழுவதும் 2022 - 2023 ஆண்டில் 20 மில்லியன் மெட்ரிக் டன் வீணடிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மதிப்பு 69,108 கோடி ரூபாய் என்றும், இதில், தமிழகத்தில் மட்டும் 1900 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டு இருப்பதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த செய்தி உண்மைதான் என்றும், இது தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை. இந்தியா முழுவதும் நடப்பதாக ’சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆய்வுக் கழகம் (ICRIER)’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாக பிரபல உண்மை சரிபார்க்கும் தலமான யூடர்ன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், பொது விநியோக அமைப்பு (PDS) முறையில் (ரேஷன் கடை முறை) ஒதுக்கப்பட்ட உணவு தானியங்கள் இந்தியா முழுவதும் 2022 - 2023 ஆண்டில் மட்டுமே 20 மில்லியன் மெட்ரிக் டன் (20 MMT) உணவு தானியங்கள் வீணடிப்பு (Leakage) செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 69,108 கோடி ரூபாய் ஆகும்.
மாநில வாரியாக வீணடிக்கப்பட்ட உணவு தானியக்களின் அளவு (சதவீதம்):
அருணாச்சலப் பிரதேசம் (பாஜக ஆளும் மாநிலம்) - 63.2%
குஜராத் (பாஜக ஆளும் மாநிலம்) - 43%
உத்தரப் பிரதேசம் (பாஜக ஆளும் மாநிலம்) - 33.1%
தமிழ்நாடு (திமுக ஆளும் மாநிலம்) - 15.8%
மேலும், ICRIER வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள்:
.
இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில், ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை அதிக அளவில் தனியார் சந்தைகளுக்கு திருப்பிவிடுவது (Siphoning) சட்டவிரோதமாக நடந்துவருகிறது.
2019ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் பொது விநியோக அமைப்பு (PDS) முறை தொடர்பாக நடந்து ஊழல்களில் பாதிக்கும் மேல் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே நடந்திருப்பதாக அன்றைய ’உணவு மற்றும் பொது விநியோகத் துறை’ இணையமைச்சர் ‘தன்வே ராவ்சாகேப் தாதாராவ்’ மக்களவையில் தெரிவித்தார்.