நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆதரிக்கிறோம் - திமுக அப்பாவு மாற்றி மாற்றி பேசிய காணொளி வைரல்!  - Seithipunal
Seithipunal


இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, நிகழ்ச்சியில் பேசுகையில், "நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கவில்லை, மாறாக, அதன் சமமான நிர்வாகத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். 

நீட் தேர்வுக்கான பொறுப்பு ரோட்டரி கிளப் அல்லது லயன்ஸ் கிளப் போன்ற சமூக சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டால், அது இன்னும் நேர்மையுடன் மேற்கொள்ளப்படும்" என்று பேசி இருந்தார்.

இதுகுறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவினர் பலரும் இந்த காணொளியை பகிர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில், அந்த நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, "நீட் தேர்வு இந்தியாவில் உள்ள கல்வி கட்டமைப்பை அழிக்க கூடியது. தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை” என்று மாற்றி பேசி பேட்டி அளித்துள்ளார். 

இந்த இரு காணொளிகளும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NEET DMK Appavu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->