அதிமுக அலுவலகம் செல்ல ஓபிஎஸ்-க்கு அனுமதி, பாதுகாப்பு உண்டு - ஆனால்..., காவல்துறை அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த மோதலை தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, பின் நீதிமன்ற தீர்ப்பால் ஜூலை 21-ஆம் தேதி சீல் அகற்றப்பட்டது. 

மேலும், அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 72 நாட்களுக்கு பிறகு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை அதிமுகவின் தலைமைக் அலுவலகமான 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வந்தார்.

இதற்கிடையே, அதிமுக அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமியையும், அவரது ஆதரவாளர்களையும் அனுமதிக்க கூடாது என்றும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுருக்கும் நிலையில் இறுதி தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்க கூடாது என்றும், ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

மேலும், அதிமுக அலுவலகத்திற்கு பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாகவும், அவருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே சி டி பிரபாகர் மனு அளித்தார்.

மேலும், அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் செல்லும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஜே சி டி பிரபாகர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்ல நீதிமன்ற அனுமதி தேவை என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் அளித்த மனு மீது காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், நீதிமன்றம் அனுமதித்தால் காவல்துறை சார்பாக பாதுகாப்பு தர தயார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK HEAD OFFICE OPS VS EPS POLICE STAND


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->