மாமனார் வீட்டு விருந்து vs போட்டோஷூட்டு விடியா முதல்வர் & வாரிசின் இணைய அடிபொடிகள்! முட்டி மோதும் ஐடி விங்கு! - Seithipunal
Seithipunal


கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்க, ஆளும் திமுகவின் ஐடி விங்கும், எதிர்க்கட்சியான அதிமுகவின் ஐடி விங்கும் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், திமுக ஐடி விங்க் பக்கத்தில், "கஜா புயல் வந்த நேரத்தில் தன் மாமனார் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போன எடப்பாடி பழனிச்சாமி தற்போது அவதூறு அரசியல் செய்துக் கொண்டிருக்கிறார். அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்று விமர்சிக்கப்பட்டு உள்ளது.

இதற்க்கு அதிமுக ஐடி விங்க் தரப்பில் பதிலடியாக, "இதையும் மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்!

தலைநகர மக்களையும், தென்னக மக்களையும் தவிக்க விட்டு, இந்தியாவைக் காக்க போகிறேன் என்று டெல்லியில் குழுப் புகைப்படம் எடுத்தவர் தானே விடியா திமுக முதல்வர்?

மழை, வெள்ளம் என்பதெல்லாம் மற்றுமொரு போட்டோஷூட்டுக்கான களமாகவே பார்க்கும் விடியா முதல்வர் மற்றும் வாரிசின் இணைய அடிபொடிகள், களத்தைப் பற்றி எங்களிடம் பேசுவது நகைமுரண்.

எத்துயர் வரினும் மக்களுக்காக களத்தில் நிற்கும் ஒரே இயக்கம் அஇஅதிமுக; ஒரே தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டுமே. எதிர்க்கட்சியிடம் கம்பு சுத்தி அடிவாங்குவதை விடுத்து, மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட கொஞ்சமாவது முயலுங்கள்" என்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK IT Wing vs DMK IT Wing Chennai rain floods issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->