தூத்துக்குடியில் பரபரப்பு - வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.!
300 drugs seized in thoothukudi
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள் மற்றும் விரலி மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதைத்தடுப்பதற்கு மாவட்டம் முழுவதும் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி முறப்பநாடு பகுதியை சேர்ந்த துரை என்பவரது வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் படி போலீசார் அங்கு விரைந்து சென்று துரை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 3 கிலோ கிரிஸ்டல் மெத்தமைட்டல் என்ற ஐஸ் போதைப்பொருளும், சாரஸ் என்ற போதைப்பொருள் 300 கிலோவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.50 கோடி என்றுத் தெரிவிக்கப்படுகிறது. இதனை பறிமுதல் செய்த போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
300 drugs seized in thoothukudi