பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


பிரபல இந்தி மற்றும் மராத்தி பட நகைச்சுவை நடிகர் அதுல் பர்சுரே (57) காலமானார்.

நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த அவர், "ஜிந்தகி 50 50", "லவ் ரெசிபி", "கட்டா மிட்டா", "கல்கத்தா மெயில்" உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கினார். அதேபோல், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, "கபில் சர்மா காமெடி ஷோ"வில் பிரபலமானார்.

சில வருடங்களுக்கு முன், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சை பெற்ற அவரின் உடல்நிலை சமீபத்தில் மீண்டும் மோசமடைந்தது. மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marathi film comedian Atul Barsure passed away


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->