கடலுக்குச் சென்றால் நலத்திட்ட உதவிகள் ரத்து - மீன்வளத்துறையின் உத்தரவால் மீனவர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையினால், புதுச்சேரியில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், கடற்கரை பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே, கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டது. 

இதற்கிடையே, புதுச்சேரியில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியேற்றியதுடன், கடலில் யாரும் இறங்காதவாறு போலீசார் ரோந்து பணியில் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், ஒரு சிலர் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றிருப்பதாக மீன்வளத் துறைக்கு புகார் வந்தது. அவர்களும் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப் பட்டுள்ளனர். தொடர்ந்து, தடையை மீறி கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fisheries department order cancel Welfare assistance fishermans going to sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->