இதை விட கேடு கெட்ட பேச்சு, மக்களை கேவலப்படுத்தும் பேச்சு உண்டா? இந்த பிழைப்புக்கு...! கொந்தளிக்கும் பாஜக தரப்பு!
BJP Narayanan condemn to Congress Chennai heavy rain Velachery issueChennai heavy rain Velachery issue
கடந்த இரு தினங்களாக தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் மழை வெளுத்து வாங்கியது.
வழக்கமாக சென்னையில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தால் முதலில் பாதிக்கப்படும் பகுதி வேளச்சேரி தான்.
தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை சிறப்பாக செய்திருப்பதாக கடந்த வருடமே தெரிவித்திருந்தது.
இருப்பினும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் வேளச்சேரி மக்கள் தமிழக அரசை நம்பாமல் தங்களது நான்கு சக்கர வாகனங்களை வேளச்சேரி மேம்பாலம் பகுதிகள் பார்க்கிங் செய்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையே பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர், "வேளச்சேரி ஏரி தானே! அங்கு போய் வீடு கட்டியது மக்களின் தவறு. உங்களை பற்றிய அக்கறை உங்களுக்கே இல்லையென்றால், அரசை குறை கூறி என்ன பயன்? சாராய கடை ஊர் பூரா இருக்கு என்பதற்காக நீங்கள் குடிக்கிறீர்களா? அப்படி அரசு அனுமதி கொடுத்தால் வீடு கட்ட வேண்டுமா? மக்கள் தானே அரசாங்கம் என்று பேசி இருந்தது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இதனை குறிப்பிட்டு பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, "இதை விட கேடு கெட்ட பேச்சு, மக்களை கேவலப்படுத்தும் பேச்சு உண்டா? இந்த பிழைப்புக்கு........." என்று நாராயணன் திருப்பதி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan condemn to Congress Chennai heavy rain Velachery issueChennai heavy rain Velachery issue