சென்னை எங்க கோட்டை! நமக்கு இந்த வசனமெல்லாம் அவசியமா? ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி!
ADMK Jayakumar Condemn to DMK MK Stalin Govt
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை எங்கள் கோட்டை என்று கொக்கரிக்கும் முதல்வரின் கவனத்திற்கு...
குடிநீரை கூட முறையாக வழங்க முடியாமல் நிர்வாக திறனற்ற ஆட்சி நடத்திக் கொண்டு இந்த வசனமெல்லாம் அவசியமா?
சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் கலந்த குடிநீரையே மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சரியான குடிநீர் இன்றி மூன்று உயிர்கள் பறிபோய் உள்ளது!
இதற்கு யார் பொறுப்பு?
மக்களுக்காக கேள்வி எழுப்பினால் கேலி செய்யும் அமைச்சர்களே, 'உதயநிதி உதய நாள்' விழாக்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
மக்களின் அடிப்படை வசதிகள் மீது கவனம் செலுத்துங்கள்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Jayakumar Condemn to DMK MK Stalin Govt