தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடைபெறவில்லை.. சபரீசன் ஆட்சிதான் நடைபெறுகிறது.! வெடிக்கும் பூகம்பம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது. நேற்று காஞ்சிபுரம் மாங்காடு பேரூராட்சியில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். 

அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, எதிர்க்கட்சியாக திமுக இருந்த போது என்னவெல்லாம் பேசினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். ஆனால் இப்போது ஆட்சிக்கு எதிராகவும், ஸ்டாலினுக்கு எதிராக பேசினால் வழக்கு போடுகிறார்கள், கைது செய்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி தான் அமலில் உள்ளது.

தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை. அவர் மருமகனான சபரீசன் தான் ஆட்சி செய்கிறார். கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அரசாக இந்த திமுக அரசு உள்ளது. திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் ஒன்றும் அறிவிக்கப்படவில்லை. தற்போது திறக்கப்படும் கட்டடங்கள், பாவங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 

பொட்டாஷ் உரம், கட்டுமான பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், காய்கறி, மளிகைப் பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்துவிட்டது. திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் எதற்கும் குரல் கொடுக்கவில்லை. தமிழக மக்களின் அதிருப்தியை பெற்ற ஒரே கட்சியாக ஏற்கனவே திமுக மாறிவிட்டது. அடுத்த நடக்கும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk jayakumar press meet about sabareesan govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->