நாளை முக்கிய மீட்டிங், முதல் மீட்டிங்! அதிரடியில் அதிமுக! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை காலை 10 மணிக்கு அக்கட்சியின் முதல் 'கள ஆய்வுக்குழு' ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதிமுகவில் சமீபத்தில், முன்னாள் அமைச்சர்கள் 10 பேரை கொண்ட கள ஆய்வுக் குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்தார். இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை, பா. வளர்மதி, வரகூர் அ. அருணாசலம் ஆகியோர் உள்ளனர்.

அதிமுக மாவட்ட அமைப்புகளை ஆய்வு செய்வதற்காக இந்த குழுவினர், அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்வார்கள். இவர்களின் ஆய்வுத் தகவல்கள் டிசம்பர் 7-க்குள் அறிக்கையாக வழங்கப்படவுள்ளது. 

கள ஆய்வுக் குழுவினர்கள் வரும் போது, மாவட்டச் செயலாளர்கள் அவர்களுக்கான ஆய்வு ஏற்பாடுகளை முழுமையாக செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முக்கிய பணியை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் முழு நெருக்கடிக்குட்படுத்தாமல் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், நாளைய கூட்டத்தின் பின், குழுவினர் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் அதிமுக சார்பு அமைப்புகளின் செயல்பாடுகளை நேரடியாக கள ஆய்வு செய்யவுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Kala Aivu Kuzhu meet EPS Election 2026


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->