ஓபிஎஸ் பக்கம் செல்கிறாரா அந்த முக்கிய புள்ளி? அதிகார பூர்வமாக வெளியான பேட்டி.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இன்று திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது,

"எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்களில் அதிக மெஜாரிட்டியாக உள்ளனர்.

எடப்பாடியாரை இடைக்கால பொதுச் செயலாளர் என்று நாங்கள் தேர்வு செய்துள்ளோம். வலிமைமிக்க தீர்ப்பினை தொண்டர்கள் ஏற்கனவே வழங்கிவிட்டனர். 

தற்போது இடைக்கால தீர்ப்புதான் வந்துள்ளது. இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை. இடைக்கால தீர்ப்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் அதிகாரமிக்கவர்கள் என்று நீதிமன்றமே அறிவித்துள்ளது. 

நான் ஓபிஎஸ் பக்கம் செல்லமாட்டேன். திமுக உடன் தொடர்பு வைத்தவர்களை எப்படி மறக்க முடியும்? ஓ.பி.எஸ். எடப்பாடியாரை அழைக்க எந்த தகுதியும் இல்லை. இரட்டைத் தலைமை வேண்டாம் என கட்சியினர் முடிவெடுத்த நிலையில், அதை பற்றி யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். 

நடக்கும் சட்ட போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்று அ.தி.மு.க. இயக்கத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடியார் வருவார்" என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mla say about ops and eps case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->