அதிமுக என்ன செய்ய வேண்டும் - ஓபிஎஸ் கொடுத்த ஐடியா!
ADMK OPS EPS
திருப்பத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தாவது, "அதிமுகவின் பிரிந்த சக்திகள் அனைத்தும் மீண்டும் ஒருங்கிணைந்தால் மட்டுமே, 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக அசைக்க முடியாத இயக்கமாக வளர்ந்தது. அதேபோல, தற்போதைய சிதறிய நிலை நீங்க, அனைவரும் ஒன்றாக வந்தால் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது" என தெரிவித்தார்.
மேலும், செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், "அதை சம்பந்தப்பட்டவர்களே பதிலளிக்க வேண்டும். ஆனால், செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டவர்" என்றார்.
மேலும், அமலாக்கத்துறை சோதனையில் ₹1,000 கோடி முறைகேடு தொடர்பாக செய்தி குறித்து கருது சொன்ன ஓபிஎஸ், "வரி ஏய்ப்பு மூலம் மதுபாட்டில்கள் நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்பது மோசமான செயல். இதை திமுக அரசு தடுக்க வேண்டிய பொறுப்பு வகிக்க வேண்டும்" என்றார்.