இன்று ஓபிஎஸ்., இபிஎஸ்.. தனித்தனியாக வெளியிட்ட அறிக்கை.!
ADMK OPS EPS SIDE WISH 2022
அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி "பக்ரீத்" திருநாள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,
"தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த "பக்ரீத்" திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத் தான்.
நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்றத் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும்.
இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலை நிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பக்ரீத் திருநாளை, கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மகிழ்ச்சியோடு கொண்டாடுமாறு கேட்டுக் கொள்வதுடன், இந்த இனிய திருநாளில் எல்லோரிடத்திலும் இறை உணர்வும் , தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனித குல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று எடப்பாடி K. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதேபோல், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடிடும் எனதருமை இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த "பக்ரீத் திருநாள்" நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு...
English Summary
ADMK OPS EPS SIDE WISH 2022