ஓபிஎஸ்-க்கு கடுமையான எதிர்ப்பு : குவிக்கப்பட்ட போலீசார்!
ADMK OPS vs EPS admk head office case
அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை விவகாரத்தில், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையே, அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான மோதல் காரணமாக, அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது.
இது தொடர்பான நீதிமன்ற வழக்கில், அதிமுகவின் தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பிரபாகர், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வர உள்ளதாகவும், அதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவை நிராகரித்த போலீசார், நீதிமன்றத்தில் சென்று அனுமதி வாங்கி வருமாறு அறிவுறுத்தினர். நீதிமன்ற உத்தரவு இருந்தால் தான் பாதுகாப்பு அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்துக்கு வருவதாக ரகசிய தகவல் கிடைக்க, எடப்பாடி பழனிசாமி என் ஆதரவாளர்கள், டிஜிபி-யிடம் அதிமுக அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு 100 போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வருகை தருவதை, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
ADMK OPS vs EPS admk head office case