ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும்.. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


ஆளுநரின் தேநீர் விருந்தை பல கட்சிகளும் புறக்கணித்து வரும் நிலையில் அதிமுக கலந்து கொள்ள உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், தமிழக ஆளுநர் என் ரவி ஆளுநர் மாளிகையில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆளுநர் மீதான குறைகளை சுட்டிக்காட்டி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக மற்றும் தோழமை கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக கண்டிப்பாக கலந்து கொள்ளும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK participate in governor meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->