அண்ணாமலைக்கு மனநலம் பாதிப்பு.. "நல்ல மருத்துவரை அணுக வேண்டும்"..!! - பெங்களூரு புகழேந்தி..!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் "முன்னாள் முதல்வர் அமைய ஜெயலலிதா என்கிற பெரிய ஆளுமையை தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசி வருகிறார். அம்மையார் ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி அவரை விட தனது மனைவியும் தாயாரும் பல மடங்கு உயர்ந்தவர்கள் என பேசி இருக்கிறார்.

இது போன்று பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. இத்தகசயிலுக்கு அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு பாஜகவின் மூத்த தலைவர்கள் அண்ணாமலை போன்றவருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து உலகமே வியந்து போற்றிய வரலாறு உண்டு. இது போன்ற பேச்சுக்களை அண்ணாமலை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே பல தலைவர்கள் அண்ணாமலை உளவியில் ரீதியாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்களை கூறிம் வரும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் விமர்சனங்களை வைத்து வருகிறார்.

எனவே அவர் நல்ல மனநல மருத்துவமனையை அல்லது மருத்துவரை அணுகுவது நல்லது. இது போன்ற விமர்சனங்களை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணாமலைக்கு எதிராக பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk Pugazhendi warning to bjp annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->