நள்ளிரவில் அணையை திறந்துவிட்டு வெள்ளக்காடாக்கி, மக்களை தத்தளிக்க விட்டிருக்கிறது ஸ்டாலினின் திமுக அரசு - அதிமுக குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


அதிமுகவை சேர்ந்த நிர்வாகி ராஜ் சத்யன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, முன்னெச்செரிக்கை நடவடிக்கையுமின்றி 1.68 லட்சம் கன அடி நீரை நள்ளிரவில் சாத்தனூர் அணையில் இருந்து திறந்துவிட்டு, கள்ளக்குறிச்சி ,விழுப்புரம் ,கடலூர் மாவட்டங்களை வெள்ளக்காடாக்கி, மக்களை தத்தளிக்க விட்டிருக்கிறது ஸ்டாலினின் திமுக அரசு.

"செம்பரம்பாக்கம்" என்று இன்று வரை அரசியல் செய்பவர்கள் எல்லாம் இப்போது கள்ள மவுனம் சாதிப்பது ஏன்? 

திருகோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன , அப்பகுதி மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் யார் பொறுப்பேற்பார்கள்?

160 க்கும் மேற்ப்பட்ட நீர்நிலைகளின் கரைகள் உடைந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

மேற்கண்ட மாவட்டங்கள் தமிழ்நாட்டில் இல்லையா? அல்லது அதை பற்றியான அக்கறை தங்களுக்கு இல்லையா?

It’s a Total failure of Governance… Pathetic! என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Raj Sathyan condemn to DMK Govt MK Stalin Saththanur dam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->