முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல் - எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
ADMK RB Udhayakumar attack case EPS Condemn
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் இ. மகேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள்,
சேடப்பட்டி ஒன்றியத்தில் கழக செயல் வீரர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு பேரையூர் செல்லும் போது, மங்கல்ரேவு அத்திப்பட்டு விலக்கு அருகே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், திமுக-வினரின் தூண்டுதலின் பேரில் சில சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலை வெறி தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வன்முறை நிகழ்வில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முக ஸ்டாலின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK RB Udhayakumar attack case EPS Condemn