தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை ரூ.30 ஆயிரம்! CM ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த செல்லூர் ராஜு! - Seithipunal
Seithipunal



பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தி உள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்து பொங்கல் தினத்தன்று ஆயிரம் ரூபாய் மற்றும் கரும்பு, ஏலக்காய், சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தினத்திற்கு பச்சரிசி கரும்பு உள்ளிட்ட மூன்று பரிசு  தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும், நிதி நெருக்கடியால் ஆயிரம் ரூபாய் வழங்க முடியாது என்றும் தமிழக அரசு அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அதிமுக ஆட்சி கால கட்டத்தில், தேர்தல் சமயத்தில் பொங்கல் பரிசு தொகையாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இப்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியதை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்  செல்லூர் ராஜு தெரிவிக்கையில், 'எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும் என்றார்.

அப்படி பார்த்தால் இன்றைய மதிப்பிற்கு ரூ.30000 வருகிறது..எனவே இந்த அரசு "பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Sellur Raju DMK MK Stalin Pongal Gift


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->