நாளை நடக்கும் செயற்குழு கூட்டம்! இன்றே தகவலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி!
ADMK Seyarkuzhu EPS press meet 2023
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், "அதிமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் மாவட்டத்தில் இருக்கின்ற கழக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது" என்றார்.
பின்னர் கர்நாடக சட்டமன்றத்தில் அதிமுக போட்டியிடுமா? என்று எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்க்கு பதிலளித்த அவர், கர்நாடகா சட்டமன்ற பொது தேர்தலை பொருத்தவரை, நாளை செயற்குழு கூட்டம் கூட்டப்படவுள்ளது. நாளை அது குறித்து மூத்த கழக நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவு செய்யப்படும்" என்றார்.
முன்னதாக இன்ற காலை செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவிக்கையில், "கர்நாடகாவில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், கோலார் தங்க வயல், காந்திநக,ர் பங்காரு பேட் போன்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோலார் தங்கவேல், காந்திநகர் போன்ற இடங்களில் தனித்து நின்று புரட்சித்தலைவி அம்மா ஆணைக்கிணங்க தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறோம். ஆகவே இந்த தேர்தலிலும் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அனுமதித்தால் போட்டியிடத் தயார்.
தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளராக அவர் இருப்பதால் அவர்தான் ஏ,பி பாரங்களை வழங்க வேண்டும். இரட்டை இலை எங்களுக்கு தான் கிடைக்கும்.
கர்நாடக பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் 20 இடங்களை பாஜகவுக்கு கொடுத்தோம். கர்நாடகாவில் பாஜக இடங்கள் தர மறுப்பது வேதனை தருகிறது" என்று புகழேந்தி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ADMK Seyarkuzhu EPS press meet 2023