விரக்தியின் உச்சத்தில் ஓபிஎஸ்...! அடித்து நொறுக்கப்பட்ட தலைமை கழகம்! திருக்குறள் கூறி பதிலடி! - Seithipunal
Seithipunal


அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அதிமுகவின் நிர்வாகி ராஜ் சத்யன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "துரோகத்தைப் பற்றி யார் பேசுவது ஓ.பன்னீர்செல்வம்?

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தன் உயிரையும் துச்சமென எண்ணி, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்த பெருமையை தலைவருக்குப் பிறகு அதிமுகவிற்கு மற்றுமொரு முறை அளித்தார்கள்.

அத்தகு பெருமைமிகு ஆட்சியை, அம்மா அவர்களின் ஆட்சியை கவிழ்க்க, ஆட்சிக்கு எதிராக வாக்களித்த நீங்கள் தான் துரோகத்தின் மொத்த உருவம்!

இருப்பினும், கட்சி நலன் என்ற ஒற்றை காரணத்திற்காக, 98% பொதுக்குழு உறுப்பினர்களும், தொண்டர்களும் தன் பக்கம் இருந்தும், உங்களுக்கு துணை முதல்வர் ஒருங்கிணைப்பாளர் என்று பதவிகளை வழங்கி அழகு பார்த்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால், துரோகம் மட்டுமே உருவான நீங்கள், எடப்பாடியார் முதுகிலும், இந்த இயக்கத்தின் முதுகிலும் குத்த முயன்றீர்கள். உங்கள் சதியை தொண்டர்கள் துணையோடு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முறித்திடவே, விரக்தியின் உச்சத்தில் துரோகத்தின் உச்சமாய் குண்டர்களுடன் கழகக் கோயிலாம் தலைமைக் கழகத்தை அடித்து நொறுக்கினீர்கள்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

என்ற திருக்குறளை தயவுசெய்து கண்ணாடியைப் பார்த்து படித்துக்கொள்ளுங்கள்" என்று ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK side reply to OPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->