இரட்டை இலை சின்னதுக்கே ஆப்பு....? இது என்ன புது டிவிஸ்ட்டா இருக்கே.. பீதியில் அதிமுகவினர்.! - Seithipunal
Seithipunal


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் ஒரு ஒற்றை தலைமை வரவேண்டும் என்ற குரல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

மேலும் அந்த ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக முழு கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும் என்றும் பெரும்பாலான தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏகோபித்த ஆதரவு இருந்ததால், பொதுக்குழு மொத்தமும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

மேலும் அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்தாலும், அவைத்தலைவராக பொறுப்பேற்ற தமிழ்மகன் உசேன், அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்ற ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார்.

இந்நிலையில், திண்டுக்கல் நகரில் இன்று 'மாயத்தேவர் அதிமுக' என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில், 
"இரட்டை இலை சின்னம் வாங்கியது நாங்கதான். 
தேவர் இனத்தின் முதல் வெற்றிவீரன் 
சின்னாளப்பட்டி மாயத்தேவர் 
அதிமுக நாங்கதான் 
எவனுக்கும் விட்டுத்தர மாட்டோம் 
எவனுக்கும் அஞ்சமாட்டோம் 
இப்படிக்கு மாநில இளைஞர் பாசறை திண்டுக்கல் மாவட்டம்
" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஓபிஎஸ், மாயத்தேவர் புகைப்படம் மற்றும் நிர்வாகி ஒருவரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது

ஒரு பக்கம் அதிமுகவின் ஒற்றை தலைமையை ஓ பன்னீர்செல்வமா? எடப்பாடி கே பழனிசாமியா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், நடுவில் புகுந்து உள்ள இந்த சின்னாளப்பட்டி மாயத்தேவர் 'இரட்டை இலை சின்னம் எங்களுடையது, அதிமுகவை எவனுக்கும் விட்டுத்தர மாட்டோம்' என்று சுவரொட்டி ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk twin leaf simple issue ops eps june


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->