வேளாண் பட்ஜெட் 2022-2023: பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடிப்பவர்களுக்கு விருது.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார்.

அதன்படி, பனை மரம் ஏறும் கருவியை கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும். புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு.

சிறு தானிய, எண்ணெய் வித்து மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் அமைக்க ரூ. 1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agriculture Budget 2022 for Palmyra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->