21-ல நிக்கிற கட்சி 22-ல ஜெயிக்குமா? இதுக்கு நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க.!! பங்கம் செய்த அதிமுக தரப்பு.!!
AIADMK criticized times now tamilnadu survey
மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் தங்கள் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பெரும்பாலான ஊடகங்கள் தமிழ்நாட்டில் தலைமையிலான கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று, ஒரு படிக்கு மேலே போய் 21 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் திமுக 22 தொகுதிகளில் வெற்றி பெறும் என வெளியிட்டுள்ள தேர்தல் கருத்துக்கணிப்பை அதிமுக தரப்பு விமர்சனம் செய்துள்ளது.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் தனது எக்ஸ் சமூகவலை தள பக்கத்தில் "நீங்கல்லாம் யாரு ? தமிழ்நாட்டு சர்வேய கூட உபி-பிகார்ல மட்டும்தான் எடுப்பீங்கபோல? 21 தொகுதியில நிக்கிற கட்சி 22 ல ஜெயிக்குமா? பாலையா பட லாஜிக் கூட பரவாயில்ல…
டைம்ஸ் நவ் கருத்துதிணிப்பு தான் இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? அடிக்கடி சொல்றோம்... உங்களால எங்க கலாச்சாரத்தை , எங்க மொழியை - எங்க வலியை புரிஞ்சிக்க முடியாதுன்னு…வடநாட்டு கட்சியும் சரி- ஊடகமும் சரி- எங்களை புரிஞ்சிக்கவே முடியாதுன்னு நாங்க சொல்றத மறுபடி மறுபடி Prove பண்றீங்க! இப்போவும் சொல்றோம் - அதுக்கு நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க" என ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ்வை விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
AIADMK criticized times now tamilnadu survey