43 தொகுதி! 19 லட்சம் வாக்குகள்! 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்க இதான் ஒரே வழி - முன்னாள் எம்பி சொல்லும் சூத்திரம்!
AIADMK Election 2021 and 2026 Edappadi Palanisamy KCP Advice
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் எம்பி-யுமான கே.சி பழனிச்சாமி அதிமுக தோல்வி குறித்து, 2026-ல் எப்படி வெற்றி பெறலாம் என்பது குறித்து ஒரு புள்ளிவிவரத்துடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தி வெற்றிவாய்ப்பை தவறவிட்ட தொகுதிகள். சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 29 தொகுதிகள்
1.)தி. நகர் -137, 2.) வேளச்சேரி -4,352, 3.) திருப்போரூர் -1947,
4.) செய்யூர் -4042, 5.) உத்திரமேரூர் -1622, 6.) காட்பாடி -746,
7.) ஜோலார்பேட்டை -1091, 8.) உளுந்தூர்பேட்டை -5256 , 9.) ராசிபுரம் -1952,
10.)திருச்செங்கோடு-2862, 11.) தாராபுரம் -1393, 12.)அந்தியூர் -1275 ,
13.)உதகமண்டலம் -5348 , 14.)குன்னூர் -4105, 15.)திருப்பூர் தெற்கு -4709,
16.)அரியலூர் -3234, 17.) ஜெயங்கொண்டம் -5452 , 18.)விருத்தாச்சலம் -862,
19.)நெய்வேலி -977, 20.)பண்ருட்டி -4697, 21.)கடலூர் -5151,
22.)மயிலாடுதுறை -2742, 23.)பூம்புகார் -3299, 24.)திருமயம் -1382,
25. ராஜபாளையம் -3898, 26.)சங்கரன்கோவில் -5297,
27.)வாசுதேவநல்லூர்-2367 , 28.)தென்காசி -370, 29.)ராதாபுரம் -5925.
மொத்தமாக 86,490 வாக்குகள் வித்தியாசத்தில் 29 தொகுதிகள் இழப்பு
சுமார் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் கீழான வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் 14
1.)பொன்னேரி -9689, 2.)வேலூர் -9181, 3.)அணைக்கட்டு -6360,
4.)குடியாத்தம் -6901, 5.)கலசப்பாக்கம் -9222, 6.)விக்கிரவாண்டி -9573,
7.)சேலம் வடக்கு -7588, 8.)ஈரோடு கிழக்கு -8904, 9.)காங்கேயம் -7331,
10.)குன்னம் -6329 , 11.)நாகப்பட்டினம் -7238,
12.)மதுரை தெற்கு -6515, 13.)ஆண்டிப்பட்டி -8538, 14.)ஒட்டப்பிடாரம் -8510
மொத்தமாக 1,11,879 வாக்குகள் வித்தியாசத்தில் 14 தொகுதிகள் இழப்பு
மொத்தமாக 10 ஆயிரம் வாக்குகளுக்கும் கீழ் 43 தொகுதிகளில் 1,98,369 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஆட்சியை இழந்திருக்கிறது. 2021-ல் ஆட்சி அதிகாரம் இருந்தும் இப்படிப்பட்ட தோல்வி ஏற்பட்டுள்ளது.
அதிமுக தொண்டர்கள் பரிசோதித்து பார்க்க வேண்டும் இந்த 43 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும், எடப்பாடி பழனிசாமி என்கிற தனிநபரின் சுயநலம் தான் மட்டுமே அதிமுக என்று நிலைநிறுத்த முயற்சிப்பது, தன் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்படவேண்டும் என்பது, விட்டுக்கொடுத்து அனுசரித்து அனைவரையும் அரவணைத்து செல்லுகிற பண்பு இல்லாத காரணத்தால் 2021-ல் ஆட்சியை இழந்தோம்.
அதை உணர்ந்து தான் ஒன்றுபட்ட அதிமுக உருவாக வேண்டும் என்று முயற்சித்து ஒருங்கிணைப்புக்குழு செயல்பட்டு வருகிறது. 2026-லாவது அதிமுக ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் ஒன்றுபட்ட அதிமுக உருவாக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK Election 2021 and 2026 Edappadi Palanisamy KCP Advice