கன்னியாகுமரியில் பயங்கரம்!...டபுள் கேம் ஆடிய வழக்கறிஞர் சரமாரி படுகொலை!...பெட்ரோல் ஊற்றி உடலை எரித்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமாரி மாவட்டம், திருப்பு விசாகம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர்,  வழக்கு தொடர்பாக தக்கலை பகுதியை சேர்ந்த கிரிஸ்டோபர் என்பவரை நாடியுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்டு  தொகையை பெற்றுக் கொண்ட வழக்கறிஞர், சரியான பதில் கூறாமல் இருந்து வந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த இசக்கிமுத்து தனது வழக்கறிஞர் நடவடிக்கை குறித்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டார். இதில் தனது வழக்கறிஞர் தனக்கு ஆதரவாக வழக்காடுவது போல் நடித்துவிட்டு தனது எதிர் தரப்பினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டு டபுள் கேம் விளையாடியதை இசக்கிமுத்து கண்டுபிடித்துள்ளார்.

தொடர்ந்து தனது  வீட்டிற்கு வழக்கறிஞரை வரவழைத்த இசக்கிமுத்து, இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து  அரிவாளால் வழக்கறிஞரின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.

மேலும்,  முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி வீட்டின் அருகே உள்ள கரையோரத்தில் வழக்கறிஞர் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்கறிஞரின் உடலை கைப்பற்றி,  சரணடைந்த இசக்கிமுத்துவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horror in kanyakumari lawyer who played double game was massacred shocked body was burnt with petrol


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->