அடுத்த அதிரடி: 'கள ஆய்வுக் குழு’ - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிளை, வார்டு, வட்டம் வாரியாக கள ஆய்வு செய்து, கழகப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக 'கள ஆய்வுக் குழுவினர்’ நியமனம் செய்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும்; புதுப்பிக்கப்பட்ட கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக, கழகத்தின் சார்பில் 'கள ஆய்வுக் குழு’ கீழ்க்கண்டவாறு அமைக்கப்படுகிறது.

கே.பி. முனுசாமி, M.L.A., 
திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., 
நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., 
பி. தங்கமணி, M.L.A., 
S.P. வேலுமணி, M.L.A., 
D. ஜெயக்குமார்
C.Ve. சண்முகம், M.P., 
செ. செம்மலை 
பா. வளர்மதி 
வரகூர் அ. அருணாசலம் தலைமையிலான குழுவினர், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு வருகை தரும் கள ஆய்வுக் குழுவினர், அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். கழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை, முழு கவனத்துடன் செய்திடுமாறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று எடப்பாடி K. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->