"ஜனாதிபதி டிரம்ப்" பெயரில் ஒயின் அறிமுகம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தல் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களம் கண்டனர்.

இதில், அமெரிக்காவில் உள்ள 538 இடங்களில் குடியரசு கட்சி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ட்ரம்ப் 248 வாக்குகள் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  தொடர்ந்து அமெரிக்காவின் 47வது அதிபராக  ட்ரம்ப் பதவியேற்க உள்ளார்.


இதற்கிடையே இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் பகுதியில் சாகட் ஒயினரீஸ் என்ற  ஒயின் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஒயினரீஸ் நிறுவனம் புதிய சிவப்பு ஒயின் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், அதற்கு ஜனாதிபதி டிரம்ப் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

சாகட் ஒயினரீஸ்-ன் டிரம்ப் ஒயின் அறிமுக நிகழ்ச்சியில், பின்யமின் மண்டல கவுன்சில் தலைவர் யிஸ்ரேல் கான்ஸ் கலந்து கொண்ட நிலையில், அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியான நிலையில், அதற்கான கொண்டாட்டத்திலும்  யிஸ்ரேல் கான்ஸ் பங்கேற்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Introduction of wine in the name of president trump


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->