இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
AIADMK EPS Announce District Secaratry meet jan 2025
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? போட்டியிடாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக தலைமை கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழகத்தில் 11.1.2025–சனிக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலயதுகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்" என்றும், இதனை எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? போட்டியிடாதா என்பது தெரியவரும்.
English Summary
AIADMK EPS Announce District Secaratry meet jan 2025