திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்; அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


​எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பில் தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த 02 குழந்தைகள் மற்றும், கர்நாடகாவில் 02 குழந்தைகளும், குஜராத்தில் ஒரு குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அவர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மராட்டிய மாநிலம் நாக்பூரில் மேலும் 02 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 07-ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தொற்று குறித்து அச்சப்படத்தேவையில்லை என்றும், அதே நேரம் நிலைமையை கவனித்து வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எச்.எம்.பி.வி. தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசணம் செய்ய வரும் பக்தர்கள் முகக்கவச
அணிந்து வர வேண்டும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Face masks are mandatory in Tirupati


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->