எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்கும் முக்கிய கூட்டம்! வெளியாகிறது அந்த அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. மேலும் வேட்பாளராக தென்னரசு போட்டியிட உள்ளத்தக்க அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தளுக்கு 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவின் இந்த தேர்தல் பணிக்குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் பலர் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில், நாளை அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரம், வெற்றி வியூகம், அதிமுக உள்கட்சி விவகாரம், தேர்தல் சின்னம், ஓபிஎஸ், பாஜக  விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது.

மேலும், நாளை காலை அல்லது, மாலை அதிமுகவின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்ற பரபரப்பு தகவலும் வெளியாகியுள்ளது.


அதிமுக தேர்தல் பணிக்குழு விவரம் :


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS meet for erode election 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->