நாளை காலை அதிமுக தலைமை அலுவலகத்தில்.., சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இன்று விசாரணை செய்து, முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஈரோடு இடைத்தேர்தலில் இருவருக்கும் (ஓபிஎஸ்-இபிஎஸ்) உகந்த பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்களே உள்ளதால், பொதுக்குழுவை கூட்டாமல், பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு உள்ளது.

இன்று மாலை 7 மணி அளவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கோட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தொடர்பான ஒப்புதலுக்கான சுற்றறிக்கையின் படிவம் நாளை காலை 9 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS Side erode election 2023 info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->