#BREAKING | ஓபிஎஸ் கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும் - அன்பாக எச்சரித்த எடப்பாடி பழனிச்சாமி!
AIADMK GS EPS warn to OPS 2023
அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள், ஓ பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானம், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் நேற்றைய முன் தினம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இரட்டை இலை, அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது என்று, அதிமுகவின் வழக்கறிஞர் இன்பதுறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பாக சபாநாயகரை சந்தித்த அதிமுகவின் கொறடா, ஓ பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்க வேண்டும் என்றும், அதற்குண்டான தேர்தல் ஆவணங்களையும் ஒப்படைத்தார்
ஆனால், சபாநாயகர் அப்பாபு இது குறித்து எந்த முடிவும் எடுக்காததால், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்பு வெளிநடப்பும் செய்தனர்.
இந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், "நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஓ பன்னீர்செல்வம் நடந்து கொள்ள வேண்டும். அதிமுக கொடியை பயன்படுத்தும் விவகாரத்தில் ஓபிஎஸ் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK GS EPS warn to OPS 2023