மதுபானங்களின் விலை 15% உயர்வு! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!
Liquor price hike
ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுபானங்களின் விலை குறைக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, ஆட்சிக்கு வந்த பிறகு மது விலையை கணிசமாக குறைத்த நிலையில், தற்போது அனைத்து மதுபானங்களின் விலையை 15% உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மது பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், தெலுங்கானாவிலும் பீர் வகைகள் மீது 15% விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், பீர் விற்பனை அதிகரிக்கும் என்பதால், இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.