தமிழக சட்டப்பேரவை :: சபாநாயகருக்கு எதிராக கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை அடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கக்கோரி பெரும்பான்மையான அதிமுக எம்எல்ஏக்கள் ஒப்புதலுடன் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் பொழுது சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் மீது சபாநாயகர் அப்பாவு முடிவெடுக்காததால் தற்பொழுது வரை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் நீடித்து வருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் 3 முறை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசி இருந்தனர். இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வருகை தந்துள்ளனர்.

ஏற்கனவே தமிழக ஆளுநர் உரையின் பொழுது தமிழக அரசு விதிகளுக்கு மாறாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்பொழுது அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டையை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளது திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MLAs wearing black shirts against Speaker Appavu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->