அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் விடுத்த செய்திக்குறிப்பு!
AIADMK P Dhanapal Tweet
இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொன் விழாவை நிறைவு செய்து, 51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதனை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் சபாநாயகருமான பி தனபால் வாழத்துச் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், "புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கபட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று பொன் விழாவை நிறைவு செய்து 51வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது, அதன் ஆரம்ப கால உறுப்பினர் என்ற முறையில் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும், அமைச்சராகவும், பேரவை துணை தலைவராகவும், அதிக காலம் பேரவைத் தலைவராகவும் பணியாற்றியதையும், தற்போதும் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருவதையும் என் வாழ்நாளில் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாக கருதுகிறேன்.

அம்மா அவர்கள் சட்டமன்றத்திலே சூழுரைத்தது போல இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டு காலம் இருந்து, ஆட்சி செய்து, மக்களுக்கு சேவை அளிக்கும்" என்று தனபால் தெரிவித்துள்ளார்.