100 நாள் வேலைத்திட்ட நிதி விடுவிப்பில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு; மறுப்பு தெரிவித்துள்ள இணை அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் கிராமப்புற எழை மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மக்களுக்கான ஊதியத்தை விடுவிக்காமல் பல மாதங்கள் நிலுவையில் வைத்துள்ளதாக மத்திய அரசு மீது தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க அரசுகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. 

இது குறித்து இன்று கேரள மாநில எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ராகுல் காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்தனர். அத்துடன்,  இது தொடர்பாக இன்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசும்போது "இத்திட்டம் தேவையை அடிப்படையாக கொண்டது 15 நாட்களுக்கு மேல் நிதி விடுவிக்கவில்லை என்றால், தொழிலாளர்களுக்கு வட்டியுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என என்று குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் என அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கனிமொழி கூறினார்.

அத்துடன், காங்கிரஸ் எம்.பி. ஆதூர் பிரகாஷ் பேசுகையில் "ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் பெறவில்லை என்றும், இந்த திட்டத்தின் கீழ் 811 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும்,  பாராளுமன்ற நிலைக்குழு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க பரிந்துரை செய்துள்ளது. நிலுவையில் உள்ள தொகையை அரசாங்கம் தாமதமின்றி விடுவிக்குமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி பதில் அளித்துள்ளார். அதாவது, கடந்த வருடம் கேரளா இத்திட்டத்தில் 3500 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், பணத்தை விடுவிப்பதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறதுதாகவும், நிலுவையில் இருக்கும் நிதி இன்னும் சில வாரங்களில் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அத்துடன், சட்டத்தின் அடிப்படையில், நிதி விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால், மாநில அரசு முதலில் ஊதியம் வழங்கும் எனவும்,  பின்னர் மத்திய அரசு நிதியை விடுவிக்கும் எனவும் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாடு ஏற்கனவே 7300 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடும்போது 07 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு 10 கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிறது. பாரபட்சம் என்பதற்கு இடமில்லை என்று குறிப்பிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Opposition parties allege that the central government is acting in a discriminatory manner in releasing 100dayS program funds Minister of State denies this


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->